கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் படந்தாலுமூடு பகுதியில் மார்த்தாண்டம் நோக்கி இருசக்கர வானகம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதே திசையில் அதிவேகமாக வந்த பால் விநியோகம் செய்யும் மினி டெம்போ கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஶ்ரீகுமார் (60), மற்றும் சஜி குமார் (55) இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பால் வண்டியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்த பின் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

அதிவேகமாக பால் விநியோக வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் நான்குநேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன் ( 33 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version