திமுகவை வழித்த தகுதி உள்ளதாக என்பதை உதயநிதி ஸ்டாலின் சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், திமுக சார்பில் நடைபெறும் நீட் போராட்டங்களில் இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து அமர வைப்பதாகக் குற்றம்சாட்டினார். “உதயநிதிக்கு ‘Gen-Z’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் அவரை யாரோ தவறாக வழிநடத்துவதாகவும், இதுபோன்ற கோமாளித்தனமான செயல்களை விட்டுவிட்டு, திமுகவை வழிநடத்தத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று உட்கட்சி வாக்கெடுப்பு நடத்தி உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தினார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் 100% அர்ப்பணிப்போடு சட்டரீதியாகவும், நேரடியாகப் பேசியும் தீர்வு காண ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால், மேகதாது அணை பற்றியோ அல்லது 1970 மற்றும் 1992-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்ட முக்கியச் சரத்துகள் பற்றியோ கேட்டால் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ எதுவும் தெரியாது என்று அமைச்சர் நிர்மல்மார் தெரிவித்தார். அதிமுக என்பது தற்போது ஒரு கிளப் போல ஆகிவிட்டதாகவும், அவர்களை மக்கள் மறந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version