தவெக அரசுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை தந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவைக்கு வருவதாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தாலும் சரி, அது தனக்கு எப்போதும் தனி மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

தொலைக்காட்சிகள் வாயிலாக தமிழக மக்கள் அனைவருக்கும் தமது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்ட துணைக்குடியரசு தலைவரிடம் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி; இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்களே அளிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், தேசத்தின் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்துப் பேசிய அவர், “மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்திய தேசம் இன்று சர்வதேச சக்திகளுக்குப் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றால், அதற்கு நமது ஒற்றுமையே முக்கியக் காரணம்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் தற்போதைய புதிய அரசு குறித்த கேள்விக்கு, “புதிய அரசு செயல்படுவதற்குச் சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version