Close Menu
    What's Hot

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாமில் சோக சம்பவம்..!! பற்றி எரிந்த ஆம்னி பேருந்து..!! 7 பேர் பரிதாப பலி..!!
    Featured

    வியட்நாமில் சோக சம்பவம்..!! பற்றி எரிந்த ஆம்னி பேருந்து..!! 7 பேர் பரிதாப பலி..!!

    editor5By editor5July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாம் நாட்டின் லாம் டாங் மாகாணத்திலிருந்து ஹோ சி மின் நகரை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, இன்று அதிகாலை டாங் நாய் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர தீ விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகள் உடல் முழுவதும் கருகி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

    பேருந்தில் மொத்தம் 24 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் பயணித்த பேருந்து அதிகாலை நேரத்தில் டாங் நாய் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியது. தீ மிக வேகமாக பரவியதால் பயணிகள் பீதியடைந்து தப்பிக்க முயற்சித்தனர். ஆனாலும், சிலர் வெளியேற முடியாமல் தீயின் பிடியில் சிக்கினர். விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் முழுமையாக கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.

    மேலும் 5 பயணிகள் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் சிறு காயங்களுடன் தப்பியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த உடனேயே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்துச் சென்றனர். பேருந்து முழுவதும் தீக்கிரையாகி, எஞ்சியவை மட்டுமே எரிந்த நிலையில் காணப்பட்டன.

    வியட்நாம் போக்குவரத்து அதிகாரிகள் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் எஞ்சின் பழுது, மின் கோளாறு அல்லது பயணிகளின் பொருட்களில் இருந்த ஏதேனும் எரியக்கூடிய பொருள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முழு விபத்து குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    bus fire accident vietnam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
    Next Article கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!
    editor5

    Related Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 21, 2026

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.