டாஸ்மாக் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் இன்னும் எத்தனை, எத்தனை மர்மங்கள் அம்பலப்பட போகிறதோ? இன்னும் யார், யார் தலை உருளப் போகிறதோ? என்று தெரியவில்லை. இந்தமுறை அடிபடும் பெயர் இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன்…. அரசியல், அமலாக்கத்துறை… இதில் எப்படி விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுகிறதா?.. இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்…

2017 முதல் தற்போது வரை டாஸ்மாக் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனடிப்படையில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

மார்ச் 13-ந் தேதி அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு கூடுதலாக விலை வைத்து விற்றது, பணியிட மாறுதல், பார் டெண்டர்களில் முறைகேடு, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து அதிக கொள்முதல், குறிப்பிட்ட வகை மதுபானங்களை மட்டும் அதிக அளவில் கொள்முதல் செய்தது போன்றவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியது.

இதன்பின்னர் டாஸ்மாக் துணை பொதுமேலாளர்கள் சங்கீதா, ஜோதிசங்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் கடந்த 2 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இருவருரிடமும் தலா ஏழு முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கடந்த 16-ந் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 2 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்நீட்சியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி உள்ளிட்ட பல படங்களை பலநூறுகோடி ரூபாய் முதலீட்டில் DAWN பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வந்தார். இதற்கான முதலீடு எங்கிருந்து கிடைத்தது போன்ற கேள்விகளை எழுப்பி பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று சென்னை எம்ஆர்சி நகரில் 174 என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரத்தீஷ் என்பவரையும் அமலாக்கத்துறையினர் தேடிச் சென்றனர். அதற்குள்ளாக அவர் துபாய் வழியாக லண்டனுக்கு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தான் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பற்றிய தொடர்புகள் தெரியவந்துள்ளது.

ரத்தீஷின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வாரந்தோறும் போதைப்பொருள் விருந்து நடந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளனவாம். இந்த விருந்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள், வெளிநாட்டு அழகிகள் போன்றவர்கள் பங்கேற்றுள்ளனராம். இதில் ட்ராகன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற கயாடு லோஹர், சின்னத்திரை தொகுப்பாளினி டிடி போன்றவர்கள் எல்லாம் வந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 4 வருடங்களாக அதாவது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு விழாக்களுக்கான தயாரிப்பு பொறுப்பு விக்னேஷ் சிவன் தான் செய்து வருகிறார். சர்ச்சைகளுக்குப் பின் சென்னையில் நடைபெற்ற பார்முலா-4 கார் பந்தய நிகழ்ச்சிகளில் கூட விக்னேஷ் சிவன் பங்களிப்பு இருந்தது. நயன்தாரா மூலமாக உதயநிதியிடம் அறிமுகமான விக்னேஷ் சிவன், அதன்மூலமாக அவரது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரிடமும் இணக்கமாகி உள்ளார். இதேபோன்று விக்ரம் ஜுஜு என்ற நபரும் விக்னேஷ் சிவனும் நெருங்கி பழகி உள்ளனர். தென்னிந்திய முன்னணி நடிகைகளை, ரத்தீஷின் வீடுகளுக்கு அழைத்து வரும் பொறுப்பை விக்ரம் ஜுஜு என்பவர் செய்துள்ளார். அதற்கு விக்னேஷ் சிவனும் உதவி உள்ளதாக கூறப்படுகிறது. உயர்ரக போதைப்பொருட்களும் அந்த விருந்துகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடான பணம் தமிழ் திரைப்படங்களை பினாமி முறையில் தயாரிக்கவும், சொகுசு வாழ்க்கை வாழவும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. வெறும் 30 வயது மட்டுமே நிரம்பிய ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் போன்றவர்கள் பல்லாயிரம் கோடிகளில் திளைப்பது எப்படி? அரசும், உயர் அதிகாரிகளும் இவர்களுக்கு துணைபோவது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை மர்மமாகவே இருக்கிறது… எந்த ஒரு பொய்யையும் எல்லா காலத்திலும் மறைத்து விட முடியாது. அவை ஒருநாள் அம்பலத்திற்கே வந்தே தீரும்.

Share.
Leave A Reply

Exit mobile version