தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியின் முழுக்கதை என்னவென்று தெரியுமா?

பைபிளில் இருந்து அவர் மேற்கோள் காட்டிய, “ஒரு இளைஞனுக்கு எதிராக தனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு அவனை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, அதிலிருந்து அவன் மீண்டு வந்து அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல, நாட்டையே எப்படி காப்பாற்றினாருன்ற கதை பைபிளில் இருக்கிறது. படித்துப்பாருங்கள்” என கூறியிருப்பார். அந்த கதை என்னவென்று தெரியுமா? அதனை விஜய்யின் வாழ்வோடு எப்படி பொருத்தி பார்ப்பது? பார்க்கலாம்.

கானா நாட்டில் வாழ்ந்த யோகோப்பு (ஜேக்கப்) என்பவருக்கு பிறந்த 12 மகன்களில் 11-வது பையன் தான் யோசேப்பு (ஜோசப்) என்பவர். அனைத்து மகன்களை விடவும் இந்த யோசேப்பு மீதுதான் அவரது தந்தையான யோகோப்புவிற்கு பாசம் அதிகமிருந்தது. அதன் ஒரு அடையாளமாக ஒரு சிறப்பு அங்கியை மகன் யோகோப்புவிற்கு வழங்கியிருப்பார் யோகோப்பு. தந்தையின் செயல்பாடுகளால் ஏற்கனவே யோசேப்பு மீது பொறாமையிலிருந்து மற்ற 11 சகோதரர்களும் சிறப்பு அங்கி வழங்கியதையடுத்து மேலும் வெறுப்படைந்து விடுவர்.

 

இதையடுத்து, அதீத பொறாமை காரணமாக யோசேப்புவை கொன்றுவிட முடிவு செய்யும் சகோதரர்கள், தந்தை அனுப்பி வைத்து தங்களை பார்க்க வந்த யோசேப்புவை கொல்ல முயலும் முன் அச்சோகதரர்களில் ஒருவனான ரூபன், “யோசேப்பு சாம் சகோதரனை அவனை கொல்ல வேண்டாம்; பதிலாக அவனை இஸ்மவேலருக்கு விற்று விடலாம்” என யோசனை சொல்ல, அதையடுத்து அனைவரும் சேர்ந்து யோசேப்புவை 20 வெள்ளிக்காசுகளுக்கு இஸ்மவேலருக்கு விற்று விடுகின்றனர். அவர் யோசேப்பை எகிப்துக்கு அழைத்து சென்று, அங்கு அரசு நிர்வாகியும் காவலர் தலைவருமான போத்திபாருக்கு விற்க, போத்திபார் யோசேப்பை தனது உதவியாளனாக நியமித்து பார்த்துக்கொள்கிறார். போத்திபாரிடம் நேர்மையாக பணியாற்றியும், போத்திபார் மனைவியின் இச்சைக்கு அடிபணியாததால் அப்பெண்ணின் சூழ்ச்சியால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

அதே சிறையில் மன்னரிடம் மதுபானம் வழங்கும் ஒருவனும், அப்பம் தயாரிக்கும் ஒருவனும் தங்களது குற்றங்களுக்காக அடைக்கப்பட, அங் அவர்களுக்கு தோன்றிய கனவுகளுக்கு யோசேப்பு விளக்கமளிக்க, அதன்படியே அவர்களின் எதிர்காலம் அமைந்தது. அதையடுத்து ஒரு கட்டத்தில் மன்னருக்கு இரண்டு கனவுகள் வர, அதற்கு யோசேப்பு விளக்கமளிக்க முடியும் என அறிந்துகொண்ட மன்னர் அரண்மனைக்கு அழைத்த யோசேப்புவிடம் விளக்கம் கேட்கிறார். யோசேப்பு அளித்த விளக்கத்தால், எகிப்து நாட்டிற்கு வரவிருந்த பஞ்சத்திலிருந்து நாட்டை தற்காத்துக்கொள்ள முடியும் என நம்பிக்கைகொண்ட மன்னர், யோசேப்புவிற்கு ஒட்டுமொத்த எகிப்து நாட்டையே நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து தனக்கு அடுத்த நிலையில் அருகியே வைத்துக்கொண்டார். தனது நிர்வாக திறமை, கடவுளின் வழிகாட்டல் மூலமாக எகிப்து நாட்டை பஞ்சத்திலிருந்து காப்பாற்றிய யோசேப்பு, அந்த பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு எகிப்து நாட்டிற்கு வந்த தனது சகோதரர்களையும் காப்பாற்றுகிறார். பின் தனது தந்தை, சகோதரர்களுக்கு எகிப்து நாட்டில் வாழ சூழல் ஏற்படுத்தி கொடுத்து வாழ வழிவகை செய்கிறார். இதுவே, விஜய் ஒரு சில வரிகளில் குறிப்பிட்ட, யோசேப்பின் (ஜோசப்பின்) கதை.

இந்த கதையை ஏன் விஜய் குறிப்பிட்டார்? என்பது உண்மையில் பலருக்கு குழப்பமாகவே உள்ளது. காரணம், இக்கதையை விஜய்யின் வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்தால், அவர் தனது குடும்பத்தாரை குறை சொல்வது போல் தான் அர்த்தமளிக்கும். ஒருவேளை அவர் அவரது தந்தையை குறிப்பிடுகிறாரோ? என்றெல்லாம் சிலர் சந்தேகங்களை கிளப்புகிறார்கள். ஏனெனில், அரசியலில் அவர் துரோகங்களை சந்திக்கும் அளவிற்கு முழுமையான அரசியலுக்கு வரவில்லை என முணுமுணுக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அல்லது ஒருவேளை, தன்னை எதிரிகள் பாழுங்கிணற்றில் தள்ளினாலும், நான் யோசேப்புவை போல் மீண்டு வந்து நாட்டை ஆளும் அளவிற்கு உயர்வேன் என கூறுவதற்காக இப்படி கூறினாரா? என்பது தெரியவில்லை. முடிந்த வரை அவரவர், அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அக்கதையோடு பொறுத்தி பார்த்துக்கொள்வோம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version