இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் தபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slumdog: 33 Temple Road). இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டுத் தேதியையும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/DZM_wquJDth/?utm_source=ig_embed&ig_rid=3c32b784-6434-4969-9ba7-22a49659969f

வெளியாகியுள்ள புதிய போஸ்டரில், விஜய் சேதுபதி பின்னால் இருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தில், கையில் இரத்தம் படிந்த நீண்ட கத்தியைப் பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக நிற்கிறார். அழுக்கடைந்த, கிழிந்த ஆடைகளுடன் தெருப்பின்னணியில் இருக்கும் அவரது இந்த லுக், படம் ஒரு பக்கா ரா (Raw) மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

“ரா வீதிகள், உண்மையான வடுக்கள், இரக்கமற்ற உணர்வுகள்…” என்ற கேப்ஷனுடன் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

https://www.instagram.com/p/DTj1TUAkU4b/? 

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. ஜய் சேதுபதி மற்றும் தபுவுடன் இணைந்து சம்யுக்தா மேனன் (கதாநாயகி), துனியா விஜய் (வில்லன்), பிரம்மாஜி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version