Close Menu
    What's Hot

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»We The Leaders-ன் ‘போதையில்லா பொள்ளாச்சி’ மாநாடு.. இறுதிக்கட்டத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள்..!!
    Featured

    We The Leaders-ன் ‘போதையில்லா பொள்ளாச்சி’ மாநாடு.. இறுதிக்கட்டத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள்..!!

    editor5By editor5July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 11 at 12.11.45 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    We The Leader இயக்கத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்டு நடத்தப்படும் முதல் மாநில அளவிலான விழிப்புணர்வு மாநாடு, நாளை மாலை பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மாநாட்டிற்கான பந்தல் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் அண்ணாமலை தொடங்கிய We The Leader இயக்கம், குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்று வளர்ந்து வருகிறது. இயக்கத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த இயக்கத்தின் முதல் பெரிய மக்கள் நிகழ்வாக ‘போதையில்லா பொள்ளாச்சி’ என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டிற்காக, பொள்ளாச்சி–கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆச்சிப்பட்டி அருகே 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நடைபெறும் இடத்திற்கான பூமி பூஜை கடந்த 2ஆம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ற வகையில் குடிநீர், கழிப்பறை, மருத்துவ உதவி மையங்கள், அவசர சிகிச்சை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிகழ்வு அரசியல் கூட்டமாக இல்லாமல், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் மாநாடாக நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

    Annamalai maanadu we the leaders
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!
    Next Article கனடாவில் முதல் டேட்டா சென்டர் ; ரூ.80,000 கோடி முதலீடு செய்யும் மெட்டா!
    editor5

    Related Posts

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    July 11, 2026

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    July 11, 2026

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    தனியுரிமை சிக்கல்!. AI பட உருவாக்க அம்சத்தை அதிரடியாக நிறுத்திய மெட்டா!

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை மாற்றும் மெகா திட்டம்.. ரூ.350 கோடியில் தலைமைச் செயலகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.