Close Menu
    What's Hot

    சீனாவை புரட்டிப்போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுகளில் 8 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்..!!

    இரட்டைமலை சீனிவாசனாரின் உயரிய இலட்சியங்களின் படி தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்  – முதலமைச்சர் புகழ்வணக்கம்

    பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விசாரணைக்கு ஆஜராகல.. செந்தில் பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?? போலீசார் தீவிர ஆலோசனை..!!
    Featured

    விசாரணைக்கு ஆஜராகல.. செந்தில் பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?? போலீசார் தீவிர ஆலோசனை..!!

    editor5By editor5July 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திருவல்லிக்கேணி போலீசார் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி, சில எம்.எல்.ஏ.க்களிடம் பணப் பேரம் நடத்த முயற்சி நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல்குமார் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த பின்னணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

    விசாரணையில், ஐ.பி.டி.எஸ். எனும் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவன உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் இருவரையும் ஜூலை 6-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினர்.

    நேற்று காலை முதலே திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக இருவரும் ஆஜராகவில்லை. இதனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்துவது, மீண்டும் சம்மன் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை போலீசார் பரிசீலித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேலும் சிக்கலான திசையை நோக்கி நகர்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் த.வெ.க. ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு இடையே புதிய மோதல்களுக்கு வித்திடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    DMK police Senthil Balaji
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடா? – அமைச்சர் நிர்மல்குமார் பதில்
    Next Article முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் நடவடிக்கை
    editor5

    Related Posts

    சீனாவை புரட்டிப்போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுகளில் 8 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்..!!

    July 7, 2026

    இரட்டைமலை சீனிவாசனாரின் உயரிய இலட்சியங்களின் படி தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்  – முதலமைச்சர் புகழ்வணக்கம்

    July 7, 2026

    பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீனாவை புரட்டிப்போட்ட கனமழை: வெள்ளம், நிலச்சரிவுகளில் 8 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்..!!

    இரட்டைமலை சீனிவாசனாரின் உயரிய இலட்சியங்களின் படி தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்  – முதலமைச்சர் புகழ்வணக்கம்

    பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!

    திமுகவுடனான நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது..!! ஒரே போடாக போட்ட திருமாவளவன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.