கடந்த திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் மரியா வில்சன், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். தகுதியான தமிழகப் பெண்களுக்குச் சென்று சேர வேண்டிய 1000 ரூபாய் உரிமைத் தொகை, முறையான சரிபார்ப்பு இன்றி வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாகத் தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

முந்தைய திமுக அரசின் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாகக் கூறிய அமைச்சர், “இந்த வெள்ளை அறிக்கை இன்னும் இரண்டு வார காலத்திற்குள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும்,” என்று குறிப்பிட்டார்.

ஆர்பிஐ வழங்கிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், கடந்த திமுக ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடியில் ஆர்பிஐ-யின் கட்டுப்பாடுகள் இல்லை என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version