தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைச் சுட்டிக்காட்டி காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என நாள்தோறும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை சூலுரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்றே, நேற்று கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பீகார் இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பதாக எக்ஸ் தளத்தில் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? என வினா எழுப்பியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி எனவும் தனது பதிவில் ஆவேசம் காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version