திருவண்ணாமலை மாவட்டம் குப்பனத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம்உசேன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் குப்பநத்தம் பகுதியில் இருந்து ஊத்தங்கரை வழியாக தர்மபுரி மருத்துவமனைக்காக சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஓலைப்பட்டி சிப்காட் அருகே வரும் போது எதிரே காரிமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வைக்கோல் ஏற்றி வர சென்ற வாகனம் பிக்கப் வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சதாம்உசேன் மனைவி சபீனா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் சதாம்உசேன் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை பலத்த காயங்களுடன் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புலியூரில் இருந்து சிப்காட் வரை செல்லும் சாலை ஒரு வழிச்சாலை என்பதால்
இருசக்கர வாகனங்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றுச் செல்லும் வாகனங்கள் நாள்தோறும் காலையும் மாலையும் அதிவேகம் காரணமாக விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
