சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நவீன டீசல் மற்றும் சி.என்.ஜி (CNG) பேருந்துகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உட்பட சுமார் 50 கி.மீ சுற்றளவு வரை சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 650 க்கு மேற்பட்ட வழிதடங்களில் 3200 க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது

சாதாரண கட்டண பேருந்துகள் (Standard Buses), சொகுசு மற்றும் குளிர்சாதன (AC) பேருந்துகள், மற்றும் புதிய மின்சாரப் பேருந்துகள் (EVs) உட்பட பல்வேறு வகைபாடு அடிப்படையில் பல்வேறு நிறங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் புதிய பேருந்துகள் கொள்முதலின் போது தங்களுக்கு விருப்பப்பட்ட நிறங்களில் பேருந்து நிறங்களை வடிவமைத்து கொள்முதல் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு மண்டலங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயக்கப்பட்டிருந்தன.

தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளின் நிறம் மாற்றப்பட உள்ளது.

அந்த வகையில் சிவப்பு மற்றும் அடர்மஞ்சள் நிறத்திலான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக ஆட்சியில் பச்சை மற்றும் நீல நிறத்திலும் , திமுக ஆட்சியில் மகளிருக்கான விலையில்லா பேருந்து பிங்க் நிறத்திலும் , பல்வேறு கோட்ட பேருந்துகள் வெளிர்மஞ்சள் நிறத்திலும் வர்ணமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version