விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணைத் தடுக்கச் சென்ற தாயை வாலிபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்ஷா என்ற இளம்பெண்ணுக்கும், அவரது உறவினரான யுவராஜாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், வர்ஷா திருமணம் செய்ய விருப்பமில்லை என மறுத்து வந்துள்ளார். இன்று காலை வர்ஷா வீட்டின் முன்பு இருந்தபோது, அங்கு அரிவாளுடன் வந்த யுவராஜா அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மகளைக் காப்பாற்றச் சென்ற தாயார் விநாயகஜோதியையும் அந்த வாலிபர் கொடூரமாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த வர்ஷா மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மல்லாங்கிணறு போலீசார், விநாயகஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த யுவராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்தும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்து தாயைக் கொன்று மகளைத் தாக்க முயன்ற இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version