மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய வந்த 67வயது முதியவர் 20 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் தங்கியிருந்து எம்.பி.ஏ பயின்று வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு, இளம்பெண்ணுடன் இருந்த தோழி ஊருக்கு சென்ற நிலையில், அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, விடுதிக்கு அருகே உள்ள மளிகைக் கடையில் மாணவி சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

பொருட்களை டெலிவரி செய்ய வந்த மளிகை கடைக்காரரான 67 வயது, தீபக் பிரதான் என்பவர், இளம்பெண் மட்டும் அறையில் தனியாக இருப்பதை அறிந்து,  உள்ளே புகுந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி மறுநாள் காலை அளித்த புகாரினைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தீபக் பிரதானை கைது செய்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version