Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டம்!. எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை!.
    இந்தியா

    ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டம்!. எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை!.

    Editor web3By Editor web3February 9, 2026Updated:February 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    no confidence om birla
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம், முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

    நாடாளுமன்றத்தில் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது போது முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீன ஊடுருவல் விவகாரம் குறித்துப் பேசினார். இதற்கு அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பாஜக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் இடையூறு செய்தனர்.

    இருப்பினும் அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களை பறக்கவிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த (பிப்.6ம் தேதி )எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அன்றைய தினம் பிரதமர் மோடி இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் மாலை பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்தார். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக தகவல் வந்ததால், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று நான் கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இது பொய்யான கூற்று என்று எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில், டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம், முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி. டி. ஆர் .பாலு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக ரயில்வே திட்டங்களுக்கு 8.5 மடங்கு நிதி ஒதுக்கீடு!. அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
    Next Article பிப்.20 வெளியாகிறதா ஜனநாயகன்? வழக்கை வாபஸ் வாங்கும் படக்குழு..!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.