✈️ அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.17 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது
✈️ பிற்பகல் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
✈️ கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது
✈️ விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இருந்துள்ளார்.
✈️ உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவு
✈️ விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
✈️ மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
✈️ விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம்.
✈️ விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்.
✈️ விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்
