இன்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் டில்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டில்லி விமான நிலையத்தில் இருந்து இன்று (டிசம்பர் 22) காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம், மும்பைக்கு புறப்பட்டு சென்றது. வானத்தில் பறந்த சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதாவது, இரு இன்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்து விட்டது. இதனால், விமானத்தை மீண்டும் டில்லியில் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

அதன்படி, டில்லி விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், பயணிகள், ஊழியர்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த அசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்தது. மேலும், மீண்டும் விமானம் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version