இந்தியாவில் 2025ம் ஆண்டில் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த ஐ-போன் மாடல் எது என தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் ஆப்பிள் போன் தயாரிப்பு தொடங்கியதும், அதன் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் போனின் விலை அதிகமாக இருந்தாலும், அதிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றுக்காக செல்போன் பிரியர்கள் பொருட்படுத்துவதில்லை.
2025-ம் ஆண்டில் மட்டும் ஐ-போன் 16 மாடல் போன்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் இந்தியாவில் அந்த மாடல் போன்கள், 65 லட்சம் விற்பனையாகியுள்ளன.
இதன்மூலம் நாட்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற சாதனையை ஐ-போன் 16 மாடல் படைத்துள்ளது. இதேபோல், ஆப்பிளின் இன்னொரு தயாரிப்பான ஐ-போன் 15 மாடல் போன்களும், இந்தியாவில் அதிகம் விற்பனையான முதல் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சீனத் தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் ஆப்பிளின் ஐ-போன் 16 மாடல் போன் விற்பனையில் பின்தள்ளியுள்ளது. இது ஐ-போன் மீதான செல்போன் பிரியர்களின் ஆசை அதிகரித்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
உலகில் தயாரிக்கப்படும் ஐ-போன்களில், இந்தியாவில் மட்டும் 12 சதவீதம் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
