மறைந்த தமிழருவி மணியன் மனைவியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழருவி மணியன் அண்மையில் தாம் நடத்தி வந்த கட்சியை, ஜி.கே. வாசனின் தமாகா கட்சியுடன் இணைத்தார். இந்நிலையில், அவரின் மனைவி திடீரென காலமானார்.
இதுகுறித்து அறிந்து தமிழருவி மணியனின் இல்லத்திற்கு வைகோ நேரில் சென்றார். பின்னர் தமிழருவி மணியன் மனைவியின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தமிழருவி மணியன், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை வைகோ தெரிவித்தார்.

