மண்டல பூஜை​யின்​போது ஐயப்​பனுக்கு அணி​விப்​ப​தற்​கான தங்க அங்கி நேற்று ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து சபரிமலைக்கு ஊர்​வல​மாக புறப்பட்டது.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 27-ம் தேதி நடை​பெறும் மண்டல பூஜையன்று சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்​கப்​படும். இதையொட்​டி, 430 பவுன் எடை கொண்ட தங்க அங்​கியை சபரிமலைக்கு கொண்​டு​வரும் வைபவம் நேற்று தொடங்​கியது.

ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் சரண கோஷத்​துடன் தங்க அங்கி ரத யாத்​திரை நேற்று தொடங்​கியது. சிறப்பு பூஜைகளுக்​குப் பின்​னர், அலங்​காரத்​துடன் கூடிய வாக​னத்​தில், துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் தங்க அங்கி ஊர்​வல​மாக கொண்​டு​வரப்​பட்​டது. வழிநெடு​கிலும் ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

சவுட்​டு​குளம் மகாதேவ கோயில், இலந்​தூர் பகவ​திதேவி கோயில், பிரக்​கானம் இடநாடு பகவதி கோயில் வழி​யாக நேற்று இரவு ஓமல்​லூர் ரத்​தகண்ட சுவாமி கோயிலை தங்க அங்கி வந்​தடைந்​தது. இன்று இரவு கோனி முரிங்​கமங்​கலம் கோயில், நாளை இரவு பெரு​நாடு சாஸ்தா கோயிலை வந்​தடை​யும்.

வரும் 26-ம் தேதி சாலக்​கா​யம் வழி​யாக பம்​பையை சென்​றடை​யும். அங்​கிருந்து மாலை 3 மணிக்கு தலைச்​சுமை​யாக நீலிமலை வழியே தங்க அங்கி கொண்டு செல்​லப்​படும். சரங்​குத்​தி​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்ட பின்​னர் 18-ம் படி வழி​யாக தங்க அங்கி எடுத்​துச் செல்​லப்​படும்.

பின்​னர் நம்​பூ​திரி, மேல்​சாந்​திகளிடம் தங்க அங்கி ஒப்​படைக்​கப்​பட்​டு, மாலை 6.30 மணிக்கு ஐயப்​பன் விக்​கிரகத்​தில் அணிவிக்​கப்​படும். பின்னர் இரவு அங்கி களை​யப்​பட்டு நடை சாத்​தப்​படும். மீண்​டும் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கி அணிவிக்​கப்​படும். அன்று முழு​வதும் தங்க அங்​கி​யுடன் கூடிய சுவாமியை பக்​தர்​கள் தரிசிப்​பர். அன்று இரவு 11 மணிக்கு ஹரிவ​ராசனம் பாடலுடன்​ மண்​டல வழி​பாடு​கள்​ நிறைவடையும்​. இந்த சிறப்பு வழிபாட்டுக்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version