இந்த போட்டோவை பாருங்க என்று நண்பர்களிடம் இருந்து வரும் லிங்கை கூட கிளிக் செய்யாதீர்கள் அது உங்கள் கணக்கை முடக்கும் Ghostpairing மோசடியாக இருக்கலாம் என்று CERT-In எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள் என பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சைபர் மோசடிகளில் சிக்கி 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த மோசடிகள் பெரும்பாலும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்தநிலையில், தற்போது புதிய மோசடி ஒன்று பரவி வருகிறது. அதாவது, இந்த போட்டோவை பாருங்க என்று நண்பர்களிடம் இருந்து வரும் லிங்கை கூட கிளிக் செய்யாதீர்கள் அது உங்கள் கணக்கை முடக்கும் Ghostpairing மோசடியாக இருக்கலாம் என்று CERT-In எச்சரித்துள்ளது. போலி லிங்க் மூலம் போன் நம்பரை எடுக்கும் ஹேக்கர்கள், Device Linking வசதி மூலம் பாஸ்வேர்டு இல்லாமலேயே வாட்ஸ் அப்பை கணினியுடன் இணைத்து தரவுகளை எடுப்பதால், Device Linking – ஐ அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்று CERT-In அறிவுறுத்தியுள்ளது.
