ஓ.எஸ்.எம். முறையில் நடந்த குளறுபடியினைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ தலைவர் ராகுல்சிங், செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் கணினி திரைவழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் கடுமையான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

விடைத்தாள்கள் முறையாக நகலெடுக்கப்படாமை, வரிசை எண்கள் விடுபடுதல் மற்றும் தவறான மதிப்பீடுகள் போன்ற பிரச்னைகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த ஓஎஸ்எம் முறைhttps://tntalks.in/featured/cbse-class-12-answer-sheet-verification-revaluation-application-begins-aadhaar-mandatory/யினால் பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, மத்திய அரசு சிபிஎஸ்இ வாரியத்திடம் இது குறித்து விரிவான விளக்கத்தைக் கோரியது.

அத்துடன் இந்த குளறுபடிகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மறு மதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஓ.எஸ்.எம். முறையில் நடந்த குளறுபடியினைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ தலைவர் ராகுல்சிங், செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version