இந்திய எல்லைக்குள் பாதுகாப்பான தகவல் தொடர்பை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்தியப் பயனாளர்களுக்கு ஒரு புதிய காலர் ஐடியை CNAP ( Calling Name Presentation) கொண்டுவர ஒப்புதல் அளித்திருந்தது. தற்பொழுது இந்தியாவில் உள்ள ஒரு சில பகுதிகளில், சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
CNAP விளக்கம் :
இந்தக் காலர் ஐடி ட்ரு காலர் ( True caller) ஆப் போல இயங்கும். அதாவது உங்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பு வரும் பட்சத்தில், உங்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த எதிர் நபரின் பெயர் உங்கள் மொபைலில் காண்பிக்கப்படும். நீங்கள் அந்த நபரின் பெயரை ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், அந்த நபரின் பெயர் முதலில் வந்து பின்னர் தான் நீங்கள் பதிவு செய்திருந்த பெயர் வரும்.

ஒரு நபர் சிம் கார்டை வாங்கும் பொழுது அந்த அந்த நபரின் கேஒய்சி மற்றும் ஆதார் ஆகிய விவரங்கள் கொடுப்பது அவசியம். தற்பொழுது இந்த டேட்டாக்கள் அனைத்தும் CNAP Portal உடன் இணைக்கப்படுவதன் மூலம், சிம்கார்டு வைத்திருப்பவரின் பெயர் விவரம் இந்த CNAP காலர் ஐடியில் தோன்றிவிடும்.
ஏமாற்றப்பட்ட எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு இது இனி மிகப்பெரிய தலைவலியாக அமையும். தொலைபேசியில் தொடர்பு கொள்பவரின் உண்மையான KYC பெயரை CNAP காலர் ஐடி அம்பலப்படுத்தும் பட்சத்தில் மோசடிகள் இனி குறையும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
