டெல்​லி​யின் ஜாமியா மில்​லியா இஸ்​லாமி​யா(ஜேஎம்ஐ) பல்​கலைக்​கழகத்​தின் வினாத் தாளில், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான அட்​டூழி​யங்​கள் குறித்த கேள்வி இடம் பெற்றதற்காக, அதை தயாரித்த பேராசிரியர் இடைநீக்​கம் செய்​யப்பட்டுள்ளார்.

மத்​திய அரசின் பல்​கலைக்​கழகங்​களில் ஒன்​றாக இருப்​பது ஜேஎம்ஐ பல்​கலைக்​கழக​மாகும். சிறு​பான்மை அந்​தஸ்து பெற்ற இந்​தப் பல்​கலைக்​கழகத்தின் இளநிலை மாணவர்களுக்கு பரு​வத் தேர்வு நடை​பெற்று வரு​கிறது. பி.ஏ. ஹானர்ஸ் சமூகப்​பணிப் பிரி​வின் ஒரு கேள்​வித் தாளில், 15 மதிப்​பெண்​ணுக்​கான ஒரு கேள்​வி​யும் இடம் பெற்​றிருந்​தது.

சமூக வலைதளங்கள்: இந்த கேள்வி பாடங்​களுக்கு எந்த வகை​யில் தொடர்புடையது என சமூகவலை​தளங்​களில் கேள்வி​கள் எழுந்​தன. சமூகத்​தில் அரசி​யல் செய்து வகுப்​பு​வாதப் பாரபட்​சம் காட்டி இருப்​ப​தாக​வும் அதில் பலர் குற்​றம் சாட்​டி​யிருந்​தனர். இதையடுத்​து, அந்​தக் கேள்​வித்​தாளை தயாரித்த பேராசிரியர் வீரேந்​திர பாலாஜி பணி​யிடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இந்த உத்​தர​வைக் குறிப்​பிட்​டு, மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகத்​தின் மூத்த ஆலோ​சக​ரான கஞ்​சன் குப்​தா​வும் எக்​ஸ்​ சமூக வலை​தளத்​தில்​ பகிர்​ந்​திருந்​​தார்​. இதன்​பிறகு, இந்​த விவ​காரம்​ மேலும்​ முக்​கி​யத்​து​வம்​ பெற்​றுள்​ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version