Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»முட்டைகளில் கேன்சர் வேதிப்பொருள்? – நாடு முழுவதும் சோதனை நடத்த FSSAI அதிரடி உத்தரவு
    இந்தியா

    முட்டைகளில் கேன்சர் வேதிப்பொருள்? – நாடு முழுவதும் சோதனை நடத்த FSSAI அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ganesh eggs wholesale jammu cxvbxsedju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில், தடைசெய்யப்பட்ட வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பெரும்பாலானோர் அன்றாடம் எடுத்துக்கொள்கிற உணவுகளில் ஒன்று முட்டை. குறிப்பாக, இதில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் குழந்தைகள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தினந்தோறும் தவறாமல் முட்டை சாப்பிடுகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல முட்டை விற்பனை நிறுவனமான ‘எக்கோஸ்’ (Eggoz) விற்பனை செய்யும் முட்டைகளில், ‘நைட்ரோபுரான்’ எனப்படும் கேன்சரை உருவாக்கக்கூடிய, தடைசெய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தின் எச்சங்கள் இருப்பதாக இணையத்தில் வெளியான ஒரு அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது பொதுமக்களிடையே முட்டையின் தரம் குறித்த அச்சத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, FSSAI தனது அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பிராண்டட்(Branded) நிறுவனங்களின் முட்டைகள் முதல் சாதாரண சில்லறை விற்பனையில் உள்ள முட்டைகள் வரை அனைத்து வகைகளிலும் மாதிரிகளைச் சேகரித்து, நாடு முழுவதும் உள்ள 10 பிரத்யேக ஆய்வகங்களுக்குச் சோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நைட்ரோபுரான்கள் என்பவை உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட ஒரு வகை ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகும். கோழிப்பண்ணைகளில் இவை சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டால், அந்த வேதிப்பொருளின் எச்சங்கள் முட்டைகளில் தங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே நைட்ரோபுரான்கள் உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன.

    ஏனெனில், முட்டையை வேகவைத்தலோ அல்லது சமைத்தலோ கூட இந்த வேதிப்பொருட்களின் எச்சங்கள் அழியாமல் அப்படியே இருக்கும். இது பொது சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

    தாங்கள் விநியோக்கிற முட்டகளில் நைட்ரோபுரான்கள் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள எக்கோஸ் நிறுவனம், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் முட்டைகள் பாதுகாப்பானவை.

    2025 டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின்படி, தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் அல்லது மருந்துகளின் எச்சங்கள் எதுவும் எங்கள் முட்டைகளில் இல்லை (Below the Limit of Quantification – BLQ). நுகர்வோரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்தச் சோதனை முடிவுகளைத் தங்கள் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

    இருப்பினும், பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு தழுவிய சோதனையைத் தொடங்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!
    Next Article அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால் பிராந்திய நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்!- அதிபர் புதின்
    Editor TN Talks

    Related Posts

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.