Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!
    உலகம்

    ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!

    Editor web1By Editor web1December 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM 2
    Screenshot
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 15ம் அதேதி புறப்பட்டு சென்றார். முதலில், ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பின்னர், எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார். பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு
    உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்ட 28வது உயரிய விருது இதுவாகும்.

    ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். ஓமனில் கிடைத்த அன்பான வரவேற்பிற்கு நன்றி என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஓமனில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாசமும் உற்சாகமும், இந்தியாவிற்கும் ஓமனிற்கும் இடையிலான மக்கள் உறவுகளை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், இந்தியா- ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று (டிச. 18) கையெழுத்தாக உள்ளது. ஜவுளி, காலணி, ஆட்டோ மொபைல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை புதிய ஒப்பந்தங்கள் மூலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்” – பழனிசாமி உறுதி
    Next Article முட்டைகளில் கேன்சர் வேதிப்பொருள்? – நாடு முழுவதும் சோதனை நடத்த FSSAI அதிரடி உத்தரவு
    Editor web1
    • Website

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.