2024ம் ஆண்டில் மட்டும் சுவாசப் பிரச்சனையால் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அபாயகரமான நிலையில் காற்றின் மாசு இருப்பதால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் டெல்லியின் காற்று மாசு 9 ஆயிரத்தை தாண்டி இருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கையில், 2024ம் ஆண்டின் இறப்பு, பிறப்பு தகவலின்படி 9,211 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இது 2023ம் ஆண்டை காட்டின் எண்ணிக்கையான 8,801-ஐ காட்டிலும் 4.6% அதிகமாகும்.
காற்றுமாசுபாட்டால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் நிமோனியா, நுரையீரல் தொற்று, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகமான முதியவர்களும், குழந்தைகளும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த ஆண்டும் காற்று மாசு அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு இருக்கும் என கருதப்படுகிறது. இதுபோன்ற மோசமான விளைவுகளை தவிர்க்க காற்று மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
