திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளனர்.

அதனால், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி அதற்கு வெளியே சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும் என்ற நிலை நிலவுகிறது. திருப்பதி மலையில் தங்கும் அறைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் ஏராளமான பக்தர்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்காய சௌத்ரி நேரில் பார்வையிட்டு வருகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version