2025-26 ஆம் கல்வியாண்டிற்கான துணை மருத்துவப் படிப்புகளுக்கான (Paramedical Courses) இணையவழி விண்ணப்ப விநியோகம் நாளை (ஜூன் 17, 2025) தொடங்குகிறது என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் 17, 2025 அன்று பிற்பகல் 12:01 மணி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஜூலை 7, 2025 அன்று மாலை 5 மணி விண்ணப்பப் பதிவுக்கான கடைசி தேதி என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.