நாடாளுமன்றத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே புதிய பிரச்சினைகளைத் தேடுவதாக கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார், அரசாங்கம் ஏற்கனவே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை நிர்ணயித்துவிட்டதாக வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில், அனைத்து புதிய கைபேசிகளிலும் சஞ்சார் சாத்தி மொபைல் செயலியை முன்கூட்டியே நிறுவுவதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவை சுற்றி ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சையை பற்றி பேசிய மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, அரசாங்கம் பல முக்கிய பிரச்சினைகளில் விவாதிக்கத் தயாராக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் எப்போதும் புதிய பிரச்சினைகளை முன்வைத்து, நடைபெற வேண்டிய செயல்பாடுகளைத் தடை செய்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளுக்கு முன்னதாக, சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் எதிர்க்கட்சிகளால் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரண் ரிஜிஜூ, புதிய சர்ச்சைக்குரிய விஷயங்களை வலியுறுத்துவதில் எதிர்க்கட்சிகள் நியாயமற்ற முறையில் நடந்து வருகின்றன” என்றும் அவர் கூறினார். “எதிர்க்கட்சிகள் எப்போதும் புதிய பிரச்சினைகளைத் தேடி, ஒவ்வொரு விஷயத்தையும் ஆயுதமாக மாற்றி குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிய ரிஜிஜூ, குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணை தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல விஷயங்கள் ஏற்கனவே விவாதத்திற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
“எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலிப்போம்; விவாதிக்க வேண்டிய அம்சங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், “ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதன் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் ஆயுதமாக மாற்றி, பாராளுமன்றம் செயல்படுவதையே தடுக்க முயல்வது சரியல்ல என்று கூறினார். மேலும், இந்த செயலி அரசு கண்காணிப்புக்கான சாதனம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ரிஜிஜூ, எதிர்க்கட்சிகள் இதனை தேவையற்ற முறையில் பரப்ப கூடாது என்று வலியுறுத்தினார்.
