பயமும் ஊழலும் மேற்கு வங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்த நிலையில், அவரை மகாபாரதத்தில் வரும் துச்சாதனனுடன் ஒப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, “14 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். மக்கள் அப்போது பயந்திருந்தனர். எங்கள் ஆட்சியில் மேற்கு வங்கத்துக்கு நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன. இங்கே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நிறைய செய்யப்பட்டது.

இப்போது தேர்தல் வந்துவிட்டது. எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு துச்சாதனன் மேற்கு வங்கத்துக்கு வந்துவிட்டார். எப்போதும் தேர்தல்கள் வந்தவுடன், துச்சாதனனும் துரியோதனனும் அங்கே வருவார்கள். சகுனியின் சீடனான துச்சாதனன், தகவல்களைச் சேகரிக்க வந்துள்ளார். இன்று, மம்தா பானர்ஜி நிலம் கொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

நான் நிலம் கொடுக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? பெட்ராபோலில் நிலம் கொடுத்தது யார்? அண்டாலில் நிலம் கொடுத்தது யார்? ஊடுருவல்காரர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து மட்டுமே வருகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், பஹல்காமில் நடந்த தாக்குதலை நீங்கள் நடத்தினீர்களா? டெல்லியில் நடந்த சம்பவத்துக்குப் பின்னால் இருந்தது யார்?

ஊழல் நிறைந்த பாஜக கட்சி. எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்துகிறார்கள். நீங்களும் உங்கள் மகனும் மட்டுமே சாப்பிடுவீர்கள், நாங்கள் சொற்பொழிவு கேட்க வேண்டுமா?” என்றார் மம்தா பானர்ஜி.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version