ஜெர்மனியை சேர்ந்த 70 வருட பாரம்பரிய நிறுவனமான “லாடா” புனேவில் தன்னுடைய புதிய கிளையை திறந்துள்ளது. இந்த நிறுவனம் துல்லியமான வெப்பக் கட்டுப்பாட்டு உபகரணங்களை தயாரிக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனம் ஆகும். ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்புகள், தெர்மோஸ்டாட்கள், மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.இது மறைந்த ஆஸ்திரிய பந்தய கார் ஓட்டுநர் நிக்கி லாடாவால் நிறுவப்பட்ட முன்னாள் லாடா ஏர் மற்றும் லாடாமோஷன் விமான நிறுவனங்களுடனும் தொடர்புடைய நிறுவனமும் ஆகும்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் உபகரணங்களில் வெப்பநிலையை – 150° முதல் 550 டிகிரி செல்சியஸ் வரை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் தயாரிக்கும் உபகரணங்களில் 365 KW வரை குளிரூட்டும் திறனும் இருக்கும். அதோட மட்டுமல்லாமல் இந்த உபகரணங்களில் அதிநவீன நெட்வொர்க் திறன்கள் மற்றும் அதிநவீன உள்ளுணர்வு செயல்பாடுகளும் அடங்கும்.
நிலையான நீர் குளியல் தொட்டிகள், குறைந்த மற்றும் உயர் வெப்பநிலை சுற்றோட்டக் கருவிகள், ஆய்வக அளவிலான மற்றும் தொழில்துறை சுழற்சி குளிர்விப்பான்கள், தொழில்துறை வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள், தானியங்கி கரைசல் பாகுத்தன்மை மற்றும் மேற்பரப்பு இழுவிசை அளவீட்டு கருவிகள் ஆகியவை லாடா நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் அடங்கும்.
35க்கும் அதிகமான மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பல புனே நகரத்தில் இயங்கி வரும் நிலையில் தற்போது இந்த நிறுவனமும் தன்னுடைய கிளையை இங்கே திறந்து உள்ளது கூடுதல் தகவல்.
