அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் எவ்வித பாகுபாடும் அல்லாமல் அனைவரையும் சென்று அடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிமையாக மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வரிச் சலுகை நிஜமானது. ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் இப்போது தாங்கள் சம்பாதிப்பதில், அதிக பணத்தை சேமித்து கொள்கின்றனர். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் வணிகம் செய்வதை எளிதாக்குகின்றன. அதிக அளவில் தீபாவளி விற்பனை நடந்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுளளார்.
