மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையில் 3 குழந்தைகளுக்கு தந்தையான ஒரு நபர், ஒரு குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தின் முகேத் தாலுகாவில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் கோண்ட்மங்கலே, தனது கிராமத்தில் ஒரு முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன் மற்றும் ஆறு வயது இரட்டை மகள்கள் இருந்தனர்.

மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்ளவர்களே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் காரணமாக, அவர் போட்டியிடத் தகுதியற்றவராக இருந்தார். பாண்டுரங் தனது நண்பரும் தற்போதைய கிராமத் தலைவருமான கணேஷ் ராமச்சந்திர ஷிண்டேவுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் சேர்ந்து, ஒரு தீய திட்டத்தைத் தீட்டினார்கள்.  அவரது இரட்டை மகள்களில் ஒருவரான பிராச்சியைக் கொல்ல முடிவெடுத்தனர்.

இதற்காக தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நிஜாம் சாகர் கால்வாய்க்கு தனது ஆறு வயது மகள் பிராச்சியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற பாண்டுரங், சிறுமியை கால்வாயில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அருகிலுள்ள வயல்களில் வேலை செய்தவர்கள் சிறுமியின் உடல் தண்ணீரில் மிதப்பதைக் கண்டனர். போலீசார் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.

சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. ஒருவர் அந்த புகைப்படத்தை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். கடுமையான விசாரணையின் போது, ​​தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் பாண்டுரங்கும், கிராம பஞ்சாயத்து தலைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version