பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நன்றி என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளியில் உள்ள ஐபோன் தயாரிப்பு ஆலையில், 9 மாதத்துக்குள் 30,000 பேரை, வேலைக்கு அமர்த்தி, தைவானைச் சேர்ந்த ‘பாக்ஸ்கான்’ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பான செய்தியை தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்.பி.,ராகுல், கவுரவமான வேலைகள், அனைவருக்குமான வாய்ப்புகள் என கர்நாடக அரசுக்கு பாராட்டு தெரிவித்துஇருந்தார்.இந்நிலையில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தன் சமூகவலைதள பக்கத்தில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

‘பிரதமரின் தொலைநோக்கு பார்வையை முழுமையாக செயல்படுத்தி வருவதால், நாம் ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாறி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version