Close Menu
    What's Hot

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவோம்; கொல்கத்தாவே இலக்கு!. பாகிஸ்தான் எச்சரிக்கை!

    ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!. இபிஎஸுக்கு ஆ.ராசா பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»‘Gratuity பெற ஓராண்டு பணிபுரிந்தாலே போதும்’ – புதிய தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?
    இந்தியா

    ‘Gratuity பெற ஓராண்டு பணிபுரிந்தாலே போதும்’ – புதிய தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mansuk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பணியாளர்கள், பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதி திருத்தப்பட்டு ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    நாட்​டில் புதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்​களை மத்​திய அரசு நேற்று முதல் அமலுக்​குக் கொண்டு வந்​துள்​ளது. நாட்​டில் தற்போது நடை​முறை​யில் உள்ள 29 மத்​திய தொழிலா​ளர் சட்டங்களை தொகுத்​து, புதி​தாக 4 புதிய தொழிலா​ளர் சட்டங்களை (Labour Codes) அதி​கார​பூர்​வ​மாக மத்​திய அரசு நடை​முறைப்​படுத்​தி​யுள்​ளது.

    நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு மேற்​கொள்​ளப்​பட்ட மிகப்​பெரிய தொழிலா​ளர் சீர்​திருத்​த​மாக இது பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் புதிய சட்ட கட்​டமைப்​பு, விதி​களை சுலப​மாக்​குதல், தொழிலா​ளர்களின் நலனை மேம்​படுத்​துதல், பாது​காப்பு அம்​சங்​களை பலப்​படுத்​துதல், தொழிலா​ளர் நடை​முறை​களை உலகளா​விய சிறந்த முறை​களுக்கு இணை​யாகக் கொண்டு வருதல் ஆகியவற்றை முதன்மை இலக்​காக வைத்துக் கொண்டு வரப்பட்டுள்​ளது.

    தொழிலா​ளர் ஊதிய சட்​டம்​-2019, தொழில்​துறை உறவுச் சட்​டம்​-2020, சமூகப் பாது​காப்​புக்​கான சட்​டம்​-2020, சுகா​தா​ரம், பாதுகாப்பு, பணி நிலை​மைச் சட்​டம்​-2020 ஆகிய 4 புதிய சட்​டங்​கள் தற்​போது அமலுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன. இந்த சட்ட மசோ​தாக்​கள் நான்​கும் கடந்த 5 ஆண்​டு​களுக்​கும் மேலாக நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்டு அமல்​படுத்​தப்​ப​டா​மல் இருந்​தன.

    இந்​நிலை​யில் நேற்று முதல் இந்த சட்​டங்​கள் அமலுக்கு வந்துள்ளன. இத்​தகவலை மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் தெரி​வித்திருந்தார்.

    இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் fixed-term employees (FTE)-க்கு பணி வழங்கும் நிறுவனம் பணிக்கொடை அளிப்பதற்கான கால வரம்பு 5 ஆண்டுகள் என்பதில் இருந்து 1 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பணியாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஒரு ஆண்டு காலம் பணியாற்றி இருந்தாலே அவருக்கு அந்த நிறுவனம் பணிக்கொடை வழங்க வேண்டும்.

    மேலும், பணியாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதியின் கீழ், அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச உடற்பரிசோதனையை நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.

    அதோடு, நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வருவாயில் 1% முதல் 2% வரை தொழிலாளர் நல நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்ற விதி, 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி பணியாளர்களின் சமூக பாதுகாப்புக்கான சலுகைகளை மேம்படுத்தும். இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், நிரந்தர பணியாளர்களுக்கான பெரும்பாலான பலன்கள் ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் கிடைக்க வகை செய்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமே.வங்கத்தில் பாபர் மசூதி கட்ட டிச.6-ல் அடிக்கல்: திரிணமூல் காங். எம்எல்ஏ ஹுமாயூன் கபிர்
    Next Article ‘போர் நிறுத்தம் குறித்த திட்டத்தை ஏற்க வேண்டும்’: உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    April 5, 2026

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவோம்; கொல்கத்தாவே இலக்கு!. பாகிஸ்தான் எச்சரிக்கை!

    ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!. இபிஎஸுக்கு ஆ.ராசா பதிலடி!

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    4 நாட்களில் ரூ.6 கோடி அதிகமான விஜய் சொத்து!. திருத்திய பிரமாண பத்திரத்தில் தகவல்!

    Trending Posts

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    April 5, 2026

    எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவோம்; கொல்கத்தாவே இலக்கு!. பாகிஸ்தான் எச்சரிக்கை!

    April 5, 2026

    ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!. இபிஎஸுக்கு ஆ.ராசா பதிலடி!

    April 5, 2026

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 5, 2026

    4 நாட்களில் ரூ.6 கோடி அதிகமான விஜய் சொத்து!. திருத்திய பிரமாண பத்திரத்தில் தகவல்!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.