இந்தியாவில் உள்ள சீன தூதரகம் ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான சீன தூதர் ஜூபெய்ஹோங் தமது X வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் 2025 டிசம்பர் 22 அன்று முதல் சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல்  விவரங்கள் தேவைப்படுபவர்கள் டெல்லியில் உள்ள சீன விசா விண்ணப்ப சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அதன் அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மதியம் 3 வரை அணுகலாம் என்று சீன தூதர் ஜூபெய்ஹோங் தெரிவித்துள்ளார். வேறு தகவல்கள் எதுவும் தேவைப்பட்டால், +91-9999036735 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தமது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version