இந்தியாவைப் பின்பற்றி பாகிஸ்தானும் உலக நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக ஒரு குழவை அமைத்துள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிடம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கையை விளக்கவும் 7 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பின்பற்றி பாகிஸ்தானும் அமைதிக்கான தனது நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலவல் பூட்டோ சர்தாரி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தைப் போல் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்றது போல பாகிஸ்தான் பிரதமர் சியால்கோட் ராணுவ தளத்திற்கு சென்றது என இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.