அனைத்து மருந்து கடைகளிலும் ஏன் ஒரு சில டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கூட நாம் ORSL என்ற பெயரில் ஒரு எலக்ட்ரோலைட் குடிநீரை பார்த்திருப்போம். ஆனால் அது உண்மையில் எலக்ட்ரோலைட் குடிநீர் அல்ல.
உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சரியான கலவையுடன் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் குடிநீர் மட்டுமே ORS ( Oral Rehydration Solution ) ஆக தகுதி பெறுகிறது. இந்த குடிநீரில் சரியான அளவில் எலக்ட்ரோலைட்ஸ், தண்ணீர் மற்றும் இதர விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தக் குடிநீரை ஒருவர் உடல் பாதையின் வேளையில், அதாவது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வந்த பின்னர் குடிக்கலாம். உடல் உஷ்ணம் அளவுக்கு அதிகமாகி, வெப்பம் சம்பந்தமாக உடலில் ஏற்படும் அதிக வியர்வை, தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் சோர்வின் வேலையில் அருந்தலாம். ஆனால் இந்த குடிநீரை மருத்துவரின் ஆலோசனையில் மட்டுமே அருந்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 15, 2025 அன்று, FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) பானங்கள், பழ பானங்கள் இனி “ORS” என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்று முக்கியமான உத்தரவை வெளியிட்டது. ORS என்ற வார்த்தையை உலக சுகாதார நிறுவனத்தின் தரச் சான்றிதழ் பெற்ற சரியான கலவை கொண்ட எலக்ட்ரோலைட் குடிநீரை விநியோகிக்கும் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் அதையும் மீறி இன்றும் ஒரு சில கடைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் தரச் சான்றிதழ் பெறாத, சரியான கலவையில் எலக்ட்ரோலைட் குடிநீரை தயாரிக்காமல் ORS என்கிற வார்த்தையை பயன்படுத்தி போலியான எலக்ட்ரோலைட் குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக ஹைதராபாதை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். டெல்லி ஹை கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் போலியான எலக்ட்ரோலைட் குடிநீர் விற்பனையாகி வருவதை பார்க்கும்பொழுது கோபம் வருகிறது. எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இது மாதிரியான போலியான எலக்ட்ரோலைட் குடிநீர் அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள வறட்சி இன்னும் தீவிரமடையும் அது மட்டும் இன்றி வயிற்றுப்போக்கு கூடுதலாக ஏற்படுத்தும். சர்க்கரை அளவு அதிகமாக உள்ள இந்த குடிநீர் உங்களுக்கு சர்க்கரை நோயையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே போலியான எலக்ட்ரானிக் குடிநீரை உங்கள் குழந்தைகளுக்கும் அதே சமயம் நீங்களும் வாங்கி குடிக்காதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
மக்களாகிய நாம் இனி உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு சரியான கலவையில் தயாரிக்கப்பட்ட உண்மையான ORS ( oral rehydration solution ) எலக்ட்ரோலைட் குடிநீரை, மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் வாங்கி அருந்துவோம்.
