திருப்பதி திருமலையில் இந்து மத வழிபாடு தவிர மற்ற மதங்கள் தொடர்பான வழிபாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு முழு தடை அமலில் உள்ளது.
இந்த நிலையில் திருமலையில் உள்ள மெகா கல்யாண மண்டபத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் நமாஸ் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தேடி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
