கோழிக்கோடுக்கு சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடு நோக்கி தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த விமானி, இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.10 மணியளவில் விமானத்தை அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டட்னர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version