புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு அதிகரித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் திமுக-வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா சிவா இன்று அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, இரா.சிவா தனது சொந்தத் தொகுதியான வில்லியனூரில் மீண்டும் களம் இறங்குகிறார். அதேபோல், காரைக்கால் தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் போட்டியிடுகிறார்.
மங்கலம் – எஸ்,எஸ், ரங்கன்
திருபுவனை – பி. அங்காளன்,
பாகூர் – ஆர். செந்தில்குமார்
முதலியார்பேட்டை – சம்பத்
உப்பளம் – அனிபால் கென்னடி,
உருளையன்பேட்டை – எஸ். கோபால்
நெல்லித்தோப்பு – வி. கார்த்திகேயன்
ராஜ் பவன் – விக்னேஷ் கண்ணன்
காலாப்பட்டு – ஏ. செந்தில் ரமேஷ்,
கதிர்காமம் – வடிவேலு
நிரவி டி.ஆர். பட்டினம் – நாக தியாகராஜன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
இதேபோல், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.
