இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாரத பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைந்து இந்திய அரசியல் தரப்பில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இந்தியா மற்றும் ரஷ்யா எப்பொழுதும் நட்பு நாடுகளாக விளங்கி வருகிறது. பல்வேறு வகையில் இரு நாட்டுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது வழக்கம்.
அதன் அடிப்படையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மக்களுக்கு இலவச டூரிஸ்ட் மற்றும் குரூப் டூரிஸ்ட் விசாக்களை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு ரஷ்யா எப்பொழுதும் ஒரு நட்பு நாடாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யா எப்பொழுதும் தன்னுடைய உதவியை தடை இல்லாமல் செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவைப்படும் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற பொருட்களை ரஷ்யா எப்பொழுதும் தடையில்லாமல் தர ரஷ்யா எப்பொழுதும் தயார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இந்தியாவில் உருவாகி வரும் மிகப்பெரிய அணுசக்தி ஆலைப் பணியில் ரஷ்யாவின் உதவி எப்பொழுதும் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் எங்கள் இருதரப்பு வர்த்தக வருவாய் கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்து 64 பில்லியன் டாலர்களாக உள்ளது. கூடிய விரைவில் இதை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
