டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி அமெரிக்கா போன்ற வெளிநாட்டுச் சக்திகளிடம் “சமரசம் செய்து கொண்டார்” (அதாவது நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார்) என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த கோயல், காந்தி குடும்பமே ஒரு முழுமையான “சமரச அரசியல் குடும்பம்” என்றும், காங்கிரஸ் ஒரு “சமரச அரசியல் கட்சி” என்றும் பகிரங்கமாகச் சாடினார். ராகுல் காந்தி எதிர்மறை அரசியலின் அடையாளமாக   மாறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகள், இந்திய எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களின் கையில் ஒரு பொம்மையாகச் செயல்படுகிறார் என்று கோயல் விமர்சித்தார். வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு ராகுல் காந்தி நாட்டின் பொது நலன் மற்றும் தேசிய நலனில் சமரசம் செய்து கொள்வதாகவும், இது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் கேட்கும் கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயங்குவதாகவும், அவர்களுக்குப் பாரதிய ஜனதா கட்சி முத்திரை குத்தித் தட்டிக்கழிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாதுகாப்பை சமரசம் செய்து, வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார். அவருக்கு தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளது. ஜார்ஜ் சொரோஸுடனான சட்டவிரோத தொடர்புகள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படும் சோரோஸ் கூட்டாளி இல்ஹான் உமருடன் அவர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறார். அவர் எல்லைப் பதற்றமான லடாக் பகுதிக்குச் சென்று இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் வெளிநாட்டு நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துகிறார்,  குறிப்பாக சீனா, பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற வெளிநாட்டு சக்திகளின் நலனுக்காக ராகுல் காந்தி பேசுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி, சோரோஸ், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து, தனது நாட்டின் நலன்களுக்கு எவ்வாறு ஆபத்தை விளைவிக்கிறார் என்பதை நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். இந்தியாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும், அதன் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க OCCRP போன்ற அமைப்புகளின் கருவித்தொகுப்பை அவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். அவர் தேசத்திற்கும் உலகிற்கும் ஒரு சூழ்ச்சிகரமான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்” என்று மத்திய அமைச்சர் குற்றம்சாட்டினார்.

வரலாற்று ரீதியாக நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரும் நாட்டைச் சமரசம் செய்ததாகக் குறிப்பிட்ட கோயல், 1971 போரில் பாகிஸ்தான் சிறைப்பிடித்த வீரர்களை விடுவிக்கும் போது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்காமல் இந்தியா சமரசம் செய்து கொண்டதைச் சுட்டிக்காட்டினார். போபர்ஸ் ஊழல் விசாரணை முடக்கப்பட்ட விவகாரம் மற்றும் சி.ஐ.ஏ (CIA) மூலம் காங்கிரஸ் கட்சி நிதி பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்களையும் அவர் விமர்சனமாக முன்வைத்தார். மன்மோகன் சிங் ஆட்சியின் போது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஒரு போட்டி அமைச்சரவையையே நடத்தி நாட்டைச் சமரசம் செய்ததாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version