மைத்துனரான ராபர்ட் வதேராவின் சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஹரியானாவின் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, ‘கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனர் இந்த அரசால் துரத்தப்பட்டு வருகிறார். இந்த புதிய குற்றப்பத்திரிகை அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகும். இது அரசியல் பழிவாங்கும் செயல். ராபர்ட் வதேரா, பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் துணை நிற்பேன். இதுபோன்ற நெருக்கடிகளை அவர்கள் தைரியமாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மை கடைசியில் வெல்லும்’ என தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version