Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
    இந்தியா

    கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025Updated:July 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் இன்றும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்யத் தொடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன. வானிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

    ”கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.” கனமழையை அடுத்து, கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

    கோழிக்கோட்டின் வடகரை தாலுகாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
    ”கடந்த 15-ந்தேதி முதல் வடக்கு கேரளாவில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அது இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது” என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன்படி, கேரளாவில் கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 மாவட்டங்களுக்கும் நாளை ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. லடாக் துணை நிலை கவர்னர்
    கனமழையால் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

    இந்நிலையில், ”கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் 22-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை: வரதட்சணை கேட்டு கொடுமை… தலைமை காவலர் கைது…
    Next Article யானைத் தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது…
    Editor TN Talks

    Related Posts

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    June 10, 2026

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    June 10, 2026

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.