Close Menu
    What's Hot

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஹமாஸ் பாணியில் டெல்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ விசாரணையில் அம்பலம்
    இந்தியா

    ஹமாஸ் பாணியில் டெல்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ விசாரணையில் அம்பலம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hamas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டெல்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது.

    செங்கோட்டையில், கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி தான் வெடி பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவர் என தெரியவந்தது. ஆய்வு மேலும், அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காஸிகுந்த் பகுதியை சேர்ந்த ஜஸிர் பிலால் வானி, தற்கொலைப்படை பயங்கரவாதி உமர்நபியுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உமர் நபி தாக்குதல் நடத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஜஸிர் பிலால் வானி வழங்கி உள்ளார். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது.

    இந்த ட்ரோன்களில் கேமரா மற்றும் பேட்டரி பொருத்தப்பட இருந்தன. நெரிசலான இடங்களில் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்த, சக்திவாய்ந்த குண்டுகள் அவற்றில் பொருத்தப்படவிருந்தன. ஆனால் இந்த பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. சிரியா, ஈராக், இஸ்ரேல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஹமாஸ் மற்றும் ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதேபோல் டில்லியில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என என்ஏஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

    டில்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அல்-பலாஹ் பல்கலை. அறங்காவலர்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடக்கிறது. உமர் பணியாற்றிய அல்-பலாஹ் பல்கலை.யின் நிதி பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். ஒயிட் காலர் பயங்கரவாதிகள் வேலை பார்த்த அல்-பலாஹ் பல்கலையில் காலை முதல் சோதனை நடந்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
    Next Article வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    February 18, 2026

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    February 18, 2026

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    February 18, 2026

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    February 18, 2026

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.