Close Menu
    What's Hot

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
    விளையாட்டு

    சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    harbajan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் 124 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 93 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது.

    இந்த ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக அமைக்​கப்​பட்​டதன் காரண​மாகவே இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​துள்​ளது என்​றும், நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் மோச​மான தோல்வி​களை சந்​தித்த பிறகும் இந்​திய அணி பாடம் கற்​றுக்​கொள்​ள​வில்லை என்றும் விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.

    இந்​நிலை​யில் இதே ஆடு​களத்​தில் கடந்த 2001ம் ஆண்டு ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் 13 விக்​கெட்​கள் வீழ்த்தி இந்​திய அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்த, முன்​னாள் சுழற்​பந்து வீச்​சாள​ரான ஹர்​பஜன் சிங் தனது யூடியூப் சானலில் கூறி​யிருப்​ப​தாவது:

    “டெஸ்ட் கிரிக்​கெட்​டையே முற்​றி​லும் அழித்​து​விட்​டார்​கள். முதல் டெஸ்ட் போட்டி நடை​பெற்ற கொல்​கத்தா ஈடன் கார்​டன் ஆடு​களத்தை போன்​று​தான் பல வருடங்​களாக அமைத்து வரு​கிறார்​கள். இதுகுறித்து யாரும் பேசுவது கிடை​யாது. ஏனெனில் இது​போன்ற ஆடு​களங்​களில் அணி வெற்றி பெறுகிறது. யாரேனும் விக்​கெட்​கள் வீழ்த்​துகிறார்​கள். அதன் வாயி​லாக அவர்​கள் சிறந்​தவர்​களாகிறார்​கள்.

    எனவே எல்​லோரும் எல்​லாம் நன்​றாக நடப்​ப​தாக உணர்​கிறார்​கள். ஆனால் இந்த பழக்​கம் இன்று தொடங்​கிய​தாக நான் நினைக்​க​வில்​லை. இது பல ஆண்​டு​களாக நடந்து வரு​கிறது. இது தவறான விளை​யாட்டு முறை. இப்​படி செயல்​பட்​டால் எந்த வகை​யிலும் முன்​னேற முடி​யாது. செக்​கில் கட்​டப்​பட்ட எருது போன்று வட்​டமடித்​துக் கொண்​டு​தான் இருக்க வேண்​டும். முற்​றி​லும் சுழலுக்கு சாதக​மான ஆடு​களங்க​ளால் நீங்​கள் வெற்றி பெறுகிறீர்​கள், ஆனால் அதனால் உண்​மை​யான பலன் எது​வும் இல்​லை.

    ஒரு கிரிக்​கெட் வீர​ராக, நீங்​கள் வளர ​முடி​யாது. நிலை​மையை நன்​றாகப் உற்று கவனிக்க வேண்​டிய நேரம் இது. பேட்​ஸ்​மேன்​கள் ரன்​கள் எடுப்​பது எப்​படி என்று தெரி​யாமல் குழப்​பமடை​யும் ஆடு​களங்​களில் போட்​டிகளை விளை​யாடு​வது கவலைக்​குரியது. இது அவர்​களுக்கு அடிப்​படை​யான பேட்​டிங் திறமை இல்​லாதது போன்ற தோற்​றத்தை கொடுக்​கும்.

    திறமை காரண​மாக அல்​லாமல், ஆடு​களத்​தின் தன்மை காரண​மாகவே வீரர்​கள் ஆட்​ட​மிழக்​கிறார்​கள் என்​றால், திறமை​யான பந்து வீச்​சாள​ருக்​கும் திறமை​யான பேட்​ஸ்​மேனுக்​கும் என்ன வித்​தி​யாசம் இருக்​கும்? டெஸ்ட் கிரிக்​கெட் இப்​படி விளை​யாடப்​படு​வதை பார்ப்​பது வருத்​த​மாக இருக்​கிறது. நாம் ஏன் இதைச் செய்​கிறோம் என்று எனக்​குத் தெரிய​வில்​லை”

    இவ்​வாறு ஹர்​பஜன் சிங் கூறி​யுள்​ளார்.

    harbajan#test#spin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘இந்தியா-ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும்’ – புஜாரா ஓபன் டாக்
    Next Article ஹமாஸ் பாணியில் டெல்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ விசாரணையில் அம்பலம்
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    June 20, 2026

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    June 20, 2026

    அரண்மனை முதல் ஆடுகளம் வரை!. கால்பந்தின் ராயல் பரிணாமம்!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.