டெல்லி த்ரிலோக்புரி பகுதியில் வீடற்று, சாலையோரம் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பார்வையற்ற பெண்மணி கடந்த வியாழக் கிழமை அன்று கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் அத்துமீறல்கள் நடந்தது உறுதி செய்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதே பகுதியை சேர்ந்த 28 வயதான விஷ்ணு என்ற இளைஞர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மூதாட்டியை தர தரவென இழுத்து வந்து, கல்லை கொண்டு தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். மூதாட்டி மயக்க நிலையில் இருந்தப் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து தீவிர தேடுதலுக்கு பிறகு விஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் தீவிர போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version